( கற்பனையில் ஒரு
மகிழ்வூந்து விற்பனை முகவருடன் வாடிக்கையாளரின் உரையாடல் )
வாருங்கள் வேஷதாரிகளே
உங்கள் பணக்கார
வேஷத்திற்கு
பொருத்தமாக ஒரு
வண்டியிருக்கிறது
வாங்கிக்கொள்ளுங்கள்
என்னது இதுதான்
மகிழ்வூந்தா
இது உண்மையில் அழகாக
இருக்கிறது
இது இருந்தால் என்
மதிப்பு கூடும்
இதைப்பற்றி கொஞ்சம்
கூறுங்களேன்.
இதற்கு நான்கு
சக்கரம்
இதில் நான்கு பேர்
அமரலாம்
இடையிலே பஞ்சரானால் ஸ்டெப்னியும்
உண்டு
ஆகா, அருமை, அப்புறம்....
அறுபது கிலோமீட்டர்
வேகத்தில் செல்ல
இந்தியச் சாலைகள் இல்லாததால்
அம்பத்தாறு
கிலோமீட்டர் வேகத்திற்கே
கிராஷ் டெஸ்ட்
செய்திருக்கிறோம்
ஆனால் நீங்கள் நூற்று
ஐம்பதில் செல்லலாம்.
இதில் நாங்கள்
காற்றுப்பை வைக்கவில்லை
உங்களுக்கு
கட்டுப்படியாவதிற்காக
நன்று நன்று மேலும்
சொல்லுங்கள்
ஏபிஎஸ் ஆப்சன்
கட்டுப்படியானால் வாங்கிகொள்ளலாம்
எச்சரிக்கையாக
இருங்கள் அடுத்த ஆண்டு
சட்டமானால் விலை
கூடிவிடும்
எனக்கு எந்த
பாதுகாப்பும் தேவையில்லை
என் விதி கெட்டி என்று
ஜோசியன் சொல்லிவிட்டான்
நீங்கள் காரை மட்டும்
கொடுங்கள்
இத்தோடு இலவசமாய்
எதைத் தருவீர்கள்
நாங்கள் இலவசமாய்
எதுவும் தருவதில்லை
சிலர் இதனுடன்
மரணத்தை வாங்கிக்கொள்கிறார்கள்....
-திலகராஜ்