Saturday, February 7, 2015

இது யமனின் வாகனம்

( கற்பனையில் ஒரு மகிழ்வூந்து விற்பனை முகவருடன் வாடிக்கையாளரின் உரையாடல் )
வாருங்கள் வேஷதாரிகளே
உங்கள் பணக்கார வேஷத்திற்கு
பொருத்தமாக ஒரு வண்டியிருக்கிறது
வாங்கிக்கொள்ளுங்கள்
என்னது இதுதான் மகிழ்வூந்தா
இது உண்மையில் அழகாக இருக்கிறது
இது இருந்தால் என் மதிப்பு கூடும்
இதைப்பற்றி கொஞ்சம் கூறுங்களேன்.
இதற்கு நான்கு சக்கரம்
இதில் நான்கு பேர் அமரலாம்
இடையிலே பஞ்சரானால் ஸ்டெப்னியும் உண்டு
ஆகா, அருமை, அப்புறம்....
அறுபது கிலோமீட்டர் வேகத்தில் செல்ல
இந்தியச் சாலைகள் இல்லாததால்
அம்பத்தாறு கிலோமீட்டர் வேகத்திற்கே
கிராஷ் டெஸ்ட் செய்திருக்கிறோம்
ஆனால் நீங்கள் நூற்று ஐம்பதில் செல்லலாம்.
இதில் நாங்கள் காற்றுப்பை வைக்கவில்லை
உங்களுக்கு கட்டுப்படியாவதிற்காக
நன்று நன்று மேலும் சொல்லுங்கள்
ஏபிஎஸ் ஆப்சன் கட்டுப்படியானால் வாங்கிகொள்ளலாம்
எச்சரிக்கையாக இருங்கள் அடுத்த ஆண்டு
சட்டமானால் விலை கூடிவிடும்
எனக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்லை
என் விதி கெட்டி என்று ஜோசியன் சொல்லிவிட்டான்
நீங்கள் காரை மட்டும் கொடுங்கள்
இத்தோடு இலவசமாய் எதைத் தருவீர்கள்
நாங்கள் இலவசமாய் எதுவும் தருவதில்லை
சிலர் இதனுடன் மரணத்தை வாங்கிக்கொள்கிறார்கள்....

-திலகராஜ்
படிப்பு, பிழைப்பதற்கான வழியைக் குறுகச் செய்கிறது.

Tuesday, February 3, 2015

செமினார் ஹாலும் தலைவலியும்


அந்த கல்லூரியின் செமினார் ஹால் நன்றாக பால்ஸ் சிலிங் (False ceiling) செய்யப்பட்டு, கண்ணாடி சன்னல்கள் மூடப்பட்டு, அழகாக திரைச்சீலையிடப்பட்டிருந்தது. செமினார் ஹாலின் அளவிற்கு ஏற்றார் போல் இரண்டு  டன் ஸ்ப்ளிட் ஏசி (Split A/C) ஐந்து பொருத்தியிருந்தார்கள். எண்பது மாணவர்கள் அமரும் அளவிற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.
     அன்று அந்த ஹாலில் பொறியியல் துறையின் தற்போதைய நிலைமை பற்றி செமினார் நடந்துகொண்டிருந்தது. செமினார் முடிந்து அனைத்து மாணவர்களும் தலைவலியோடு வெளியே வந்தார்கள். செமினார் அவர்களது இயல்பான வகுப்பைவிட நன்றாகத்தான் இருந்தது. பிறகு ஏன் தலைவலி வந்தது?
     மாணவர்களுக்கு தலைவலி வந்ததற்கு அந்த அறையில் செய்யப்பட்டிருந்த ஏர்கண்டிஷனிங் சிஸ்டமே காரணமாகும். ஸ்ப்ளிட் ஏசியானது மூடிய அறையின் உள்ளே இருக்கும் காற்றை மட்டும் குளிர்வித்து அதிலிருந்து தேவையான அளவு ஈரப்பதத்தை(Moisture) எடுக்கும். ஓரளவு மாசுக்களை வடிகட்டும். இப்பொழுது பார்த்தீர்களானால் எண்பது மாணவர்களும் மூடிய அறையில் இருக்கும்பொழுது அவர்கள் சுவாசிப்பதின் காரணமாக அறையில் உள்ள காற்றில் பிராண வாயு(oxygen) குறைய ஆரம்பித்து கரியமிலவாயு (corbondioxide) அதிகரிக்க ஆரம்பிக்கும். தேவையான அளவு தூய காற்றை (fresh air)  செலுத்துவதற்கான எந்த அமைப்பும் ஸ்ப்ளிட் ஏசியில் இல்லை. போதுமான அளவு பிராணவாயு கிடைக்காததால் தலை வலி எடுக்க ஆரம்பிக்கும். மேலும் காற்று உள்ளுக்குள்ளேயே சுற்றி வருவதால் நோய் கிருமிகள் பரவுவதற்கு ஏதுவாகும்.

     இதில் கொடுமை என்னன்னா இன்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள செமினார் ஹால் மற்றும் ஆய்வகங்களில், “படித்த”     (M.E, PhD) ஆசிரியர்கள் இருந்தும் இந்த மாதிரி “டிசைன்” செய்திருப்பதுதான்!.

Sunday, February 7, 2010

Saturday, January 30, 2010

பத்தாம் வகுப்பு பெயில்

ஒரு ஊரில் ஒருவர் மாதா கோயிலில் மணி அடித்துக் கொண்டிருந்தார். அப்போது புதிதாக வந்த பாதிரியார், பத்தாம் வகுப்பு பாஸ் ஆனால்தான் மணி அடிக்கும் வேலை என புதிய விதியை உன்டாக்கினார். பத்தாம் வகுப்பு பெயில் ஆன நமது ஹீரோவின் வேலை பறி போனது.

வயிற்று பிழைப்புக்காக அவர் வேறு வழி தெரியாமல் கோயிலின் எதிரில் மெழுகுவர்த்தி கடை வைத்தார். அவரின் கடின உழைப்பின் காரணமாக மெழுகுவர்த்தி கடை பெட்டி கடையாக மாறி பிறகு மிகப் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர் என மிக பெரிய தொழில் அதிபராக மாறினார். பத்திரிக்கை அன்பர்கள் அவரை பேட்டி கண்டனர்.

அப்பொழுது ஒருவர் ," ஐயா! பத்தாம் வகுப்பு பெயில் ஆன நீங்க இவ்வளவு பெரிய ஆளாக இருகிறீங்க. பாஸ் ஆன என்னவாயிருபீங்க?.

அதற்கு அவர் கூலாக மாதா கோயிலில் மணி அடித்துக் கொண்டிருப்பேன் என பதிலளித்தார்.

Sunday, January 17, 2010

மாடப் புறா கதை

ஒரு புறா தன் குஞ்சுகளுடன் மசூதியில் கூடுகட்டி வாழ்ந்தது. அப்பொழுது ரம்சான் வந்தது. புறா தன் குஞ்சுகளிடம் " விழா வந்துவிட்டது நாம் இங்கிருந்து சென்று மாதா கோயில் கோபுரத்தில் தங்கலாம் ", என்றது. அவை மாதா கோயில் கோபுரத்தில் தங்கின. பின்னர் கிறிஸ்துமஸ் வந்தது. அவை மாதா கோவிலை விட்டு சிவன் கோவில் கோபுரத்தில் கூடு கட்டி வாழ்ந்தன. குஞ்சு புறா கேட்டது தாய் புறாவிடம், " அம்மா நாம் மசூதியில் இருந்த போது அங்கு வந்தவர்களை முஸ்லிம்கள் என்றனர். நாம் மாதா கோவிலில்  இருந்த போது அங்கு வந்தவர்களை கிறிஸ்தவர்கள்  என்றனர். நாம் சிவன்  கோவிலில்  இருந்த போது அங்கு வந்தவர்களை ஹிந்துக்கள்   என்றனர். ஆனால் என்கிருந்தாலும் நம்மை மட்டும் மாடப் புறா என்கிறார்களே ஏன்?". அப்போது தாய் புறா கூறியது அதனால் தான் நாம் உயரத்தில் இருக்கிறோம் அவர்கள் கீழே இருக்கிறார்கள் என்று மத வெறியர்களுக்கு சாட்டையடியாக பதில் கூறியது.